மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து டிரான்ஸ்பார்மர் மீது குதித்த இளைஞர் பலி
சென்னை , 26 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த சஞ்சீவ், 2-வது மாடியில் இருந்து அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது குதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவரது உடலில் பலத்த
A


சென்னை , 26 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த சஞ்சீவ், 2-வது மாடியில் இருந்து அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது குதித்தார்.

இதில் மின்சாரம் தாக்கியதில் அவரது உடலில் பலத்த தீக்காயங்களும், தலையில் படுகாயமும் ஏற்பட்டது.

இதையடுத்து கீழே விழுந்த சஞ்சீவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சஞ்சீவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA