ஐதராபாத் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் எனது பண்ணை வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் இல்லை - டி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கவிதா
ஐதராபாத் , 26 செப்டம்பர் (ஹி.ச.) ஐதராபாத் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தெலங்கானா ரக்ஷண சேனா சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவி கவிதா தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழ
A


ஐதராபாத் , 26 செப்டம்பர் (ஹி.ச.)

ஐதராபாத் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தெலங்கானா ரக்ஷண சேனா சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவி கவிதா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எழுத்துப் பிழைகள் உள்ளிட்ட காரணங்களை கூறி வாக்குகள் நீக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க.வை திருப்திப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் வேறு கட்சியில் இணைந்து எம்.பி. தேர்தலில் போட்டியிடுவது நியாயமானது அல்ல என்று கூறிய கவிதா, கட்சி தாவல் அரசியலையும் விமர்சித்தார்.

ஆதிலாபாத் ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், தெலங்கானாவில் கல்வி மற்றும் மருத்துவத் துறைகள் சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தி, நிலைமையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிம்ஸ், நீலோஃபர் உள்ளிட்ட முக்கிய அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் தொலைபேசியில் கேட்டுக்கொண்டாலும் படுக்கைகள் கிடைக்காத நிலை இருப்பதாக அவர் கூறினார். சுமார் 11 சுகாதார திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஆரோக்கியஸ்ரீ திட்டத்துக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மாவட்ட கலெக்டர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் விடுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கவிதா, தெலங்கானா ரக்ஷண சேனா சார்பிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையே, தனது பண்ணை வீடு தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் கவிதா திட்டவட்டமாக மறுத்தார். தனது பண்ணை வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் இல்லை என்றும், இனாம் அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திலும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், அந்த பண்ணை வீடு எப்.டி.எல். (நீர்நிலையின் முழு மட்டம்) பகுதிக்குள் இல்லை என்றும் கூறினார்.

தனது சொத்துகள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த கவிதா, மக்களின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தன் மீதும், பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக விமர்சித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA