கொடைக்கானல் பெப்பர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை
கொடைக்கானல், 26 செப்டம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் பெப்பர் அருவி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த அருவி, சமீப கால
Temporary ban on tourists visiting Kodaikanal's Pepper Falls.


கொடைக்கானல், 26 செப்டம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் பெப்பர் அருவி அமைந்துள்ளது.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த அருவி, சமீப காலமாக சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கி அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மலைப்பகுதிகளில் கனமழை பெய்தால் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பிரசித்தி பெற்ற பெப்பர் அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பெப்பர் அருவிக்கு செல்லும் பாதை முழுவதும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி அருவிக்கு செல்ல முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பருவமழை முடிந்து நிலைமை சீரான பிறகு மீண்டும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b