குவாஹாட்டியில் போலி ஆதார் அட்டைகளுடன் 2 வங்கதேசத்தினர் கைது
அசாம் , 26 செப்டம்பர் (ஹி.ச) அசாம் மாநிலத்தில் குவாஹாட்டி பல்தான் பஜார் ரயில் நிலையத்தில் இரண்டு வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக குவாஹாட்டி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது
Two Bangladeshis arrested in Guwahati with fake Aadhaar cards.


அசாம் , 26 செப்டம்பர் (ஹி.ச)

அசாம் மாநிலத்தில் குவாஹாட்டி பல்தான் பஜார் ரயில் நிலையத்தில் இரண்டு வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக குவாஹாட்டி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து காவல்துறை துணை ஆணையர் குலேந்திர நாத் டேகா கூறுகையில்,

ரகசிய தகவலின் அடிப்படையில் பல்தான் பஜார் ரயில் நிலையத்தில் நாங்கள் சோதனை நடத்தினோம்.

அந்த சோதனையின் போது சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த இரண்டு வங்கதேசத்தினரை கைது செய்தோம்

விசாரணையின் போது, அவர்கள் மேகாலயா எல்லை வழியாக ரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், வேலை தேடி மேற்கு வங்காளத்திற்கு செல்ல முயன்றதாகவும் ஒப்புக்கொண்டனர்

அவர்களிடமிருந்து இரண்டு போலி ஆதார் அட்டைகள் மற்றும் வங்கதேச நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் தற்போது எங்கள் காவலில் உள்ளனர். அடுத்த சில நாட்களில் அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற, 1950-ம் ஆண்டின் குடியேறியவர்கள் (அசாமிலிருந்து வெளியேற்றுதல்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b