வீரமணி பாலியல் வழக்கு - சாந்தி மற்றும் அவரது கணவரிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை
சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.) சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் ஜெம் கிரானைட் நிறுவனத்தில
Veeramani sexual assault case


சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.)

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் ஜெம் கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்த கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சாந்தி மற்றும் அவரது கணவரிடம் இன்று இரண்டாவது நாளாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. முதல் நாள் விசாரணையில் பெறப்பட்ட தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததாக கூறப்படுவதால், அதனை தெளிவுபடுத்தும் வகையில் இரண்டாவது நாளாக விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாந்தியிடமும், அவரது கணவரிடமும் தனித்தனியாகவும், பின்னர் இருவரையும் ஒன்றாக வைத்தும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது இருந்த சூழ்நிலைகள் குறித்து விரிவாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b