மக்கானா ஒரு ஹெக்டேரில் ரூ.5 லட்சம் வருமானம்..!
பீகாரில் பிரபலமான மக்கானா விவசாயம் குறித்து முழுமையான தகவல்கள், சாகுபடி முறைகள், மகசூல், செலவு மற்றும் வருமான வாய்ப்புகள்
Makkana


தமிழ்நாடு, 26 செப்டம்பர் (ஹி.ச.)

விவசாயத்தில் அதிக வருமானம் தரக்கூடிய மாற்றுப் பயிர்களை நோக்கி விவசாயிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், பீகாரில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் மக்கானா தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

மக்கானா சாகுபடிக்கு குளங்கள், நீர் தேங்கும் நிலப்பகுதிகள் மற்றும் ஆழம் குறைந்த நீர்நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. ICAR தகவலின்படி, பீகாரில் சுமார் 15,000 ஹெக்டேர் நீர்நிலைகளில் மக்கானா பயிரிடப்படுவதாகவும், சுமார் 5 லட்சம் குடும்பங்கள் சாகுபடி, அறுவடை, பதப்படுத்துதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புடையதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கானா விவசாயம் ஒரு பயிர் சாகுபடியாக மட்டுமின்றி, அறுவடை, பதப்படுத்துதல், தரம் பிரித்தல், பேக்கிங் மற்றும் சந்தைப்படுத்துதல் என பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் சங்கிலியாகவும் பார்க்கப்படுகிறது.

மக்கானாவின் மகசூல், ரகம், நீர்நிலையின் தன்மை, விதைத் தரம், பராமரிப்பு மற்றும் சாகுபடி முறையைப் பொறுத்து மாறுபடும்.

மக்கானா ரகத்தை, விவசாயிகளின் வயல்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2.8 முதல் 3 டன் வரை உற்பத்தி திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய ரகங்களுடன் ஒப்பிடும்போது அதிக உற்பத்தித் திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

எனவே, “ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 லட்சம்” என்பது அனைத்து விவசாயிகளுக்கும் உறுதியான வருமானம் என்று கருத முடியாது. மகசூல் மற்றும் அந்த நேரத்தில் கிடைக்கும் சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் மொத்த வருவாய் மாறுபடும்.

குறிப்பாக நீர்நிலையின் தரம் மற்றும் ஆழம் உயர்த்தப்படும்., விதை மற்றும் நடவு பொருட்களின் செலவு குறையும். இதன் மூலம் விவசாயிகள் மூலப்பொருளை மட்டும் விற்பனை செய்வதைத் தாண்டி, தரம் பிரித்தல், பதப்படுத்துதல், பேக்கிங் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

Hindusthan Samachar / Durai.J