Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர் , 27 செப்டம்பர் (ஹி.ச.)
சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
பஸ்தர், தம்தரி, பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஷ்காரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ள நிலைமையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA