Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 27 செப்டம்பர் (ஹி.ச)
பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து, பஞ்சாப் மாநிலம் பகவாராவில் இன்று அதிகாலை மாணவர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்ததா என்பதை காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை, குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளமும் இன்னும் தெரியவில்லை.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடையாளம் தெரியாத பல நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜலந்தர் சரகத்தின் துணை காவல் துறை தலைவர் (டிஐஜி) நவீன் சிங்லா கூறுகையில், லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக (எல்பியூ) மாணவர்கள் இந்த குற்றச்சாட்டுகள் இணையத்தில் பரவியதை அடுத்து, இன்று அதிகாலை 2 மணிக்கு போராட்டத்தைத் தொடங்கினர்.
என்னையும் எங்கள் சரகத்தைச் சேர்ந்த அனைத்து மூத்த காவல் கண்காணிப்பாளர்களையும் உள்ளடக்கி நாங்கள் காவல் படையை இங்கு குவித்தோம். இங்கு வந்த பிறகு, மூன்று நாட்களுக்கு முன்பு
(செப்டம்பர் 24) ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுவதே அவர்களின் முதன்மையான குறை என்பதை அறிந்தோம்.
சம்பவத்தின் போது அந்தப் பெண் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்ததாகவும், அதன் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை குறித்து தடயவியல், சிசிடிவி மற்றும் தொலைபேசி பகுப்பாய்வுகள் உட்பட தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்துவோம். மேலும், மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
எங்களுக்கு இப்போது தகவலும் அவரது வாக்குமூலமும் கிடைத்துள்ளது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வேறு சில கோரிக்கைகளும் உள்ளன. உதாரணமாக, பெண்கள் விடுதியில் உள்ள முழு ஊழியர்களும் பெண்களாக இருக்க வேண்டும் என்று மாணவிகள் கோரியுள்ளனர். எனவே, இது போன்ற சில குறிப்பிட்ட கோரிக்கைகள் உள்ளன, நிர்வாகத்துடன் அமர்ந்து பேசி அவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வோம்.
என்று டிஐஜி சிங்லா கூறினார்.
இந்த சம்பவம் மற்றும் அவர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க மாணவர் பிரதிநிதிகள் இன்று எல்பியூ நிர்வாகத்தை சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b