தமிழ் இதழியலின் பிதாமகர் சி.பா. ஆதித்தனார் - திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்
சென்னை, 27 செப்டம்பர் (ஹி.ச.) ''தமிழர் தந்தை'' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் இன்று (செப் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று கூறியிருப்பதாவது: ''செ
DMK leader Stalin pays tribute


சென்னை, 27 செப்டம்பர் (ஹி.ச.)

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் இன்று (செப் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று கூறியிருப்பதாவது:

'செயற்கரிய செய்த பெரியார்' எனத் தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் திரு. சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்!

பாமரரும் உலக நடப்புகளைப் படித்தறிய ஏதுவாக எளிய மொழிநடையில் இதழியலை மாற்றியவர்.

இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது சட்டப்பேரவைத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சர் எனத் தடம் பதித்தவர்.

தமிழ் மொழிக்கும் தமிழ் இதழியலுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஐயா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b