சட்டம் ஒழுங்கு தகவல்களை ஆர்.டி.ஐ வரம்பிலிருந்து விலக்குவது எதேச்சதிகாரத்தின் உச்சம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
சென்னை, 27 செப்டம்பர் (ஹி.ச.) சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு எதேச்சதிகாரத்தின் உச்சம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார
சட்டம் ஒழுங்கு தகவல்களை ஆர்.டி.ஐ வரம்பிலிருந்து விலக்குவது எதேச்சதிகாரத்தின் உச்சம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு


சென்னை, 27 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு எதேச்சதிகாரத்தின் உச்சம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மக்களின் அடிப்படை உரிமையான தகவல் அறியும் உரிமையை முடக்குவதன் மூலம் அரசின் தோல்விகளை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். வெளிப்படைத்தன்மை இல்லாத ஆட்சியே இதுபோன்ற அடக்குமுறை உத்தரவுகளை பிறப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜெம் வீரமணி விவகாரம் குறித்து பேசிய ஜெயக்குமார், இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சட்டப்பேரவைத் தலைவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், பேரவைத் தலைவர் அப்பாவு நடுநிலையாக நடந்து கொள்ளாமல் நாரதர் வேலை பார்ப்பதாக கடுமையாக சாடினார்.

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே திட்டமிட்டு சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதே அவரது செயல்பாடாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

Hindusthan Samachar / vidya.b