வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி- அக்.30 வரை அவகாசம் நீட்டிப்பு
புதுடெல்லி , 27 செப்டம்பர் (ஹி.ச.) டெல்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில், கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வாக்காளர்
A


புதுடெல்லி , 27 செப்டம்பர் (ஹி.ச.)

டெல்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில், கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வாக்காளர் பட்டியலின் வரைவு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளுக்கான காலக்கெடு ஏற்கனவே செப்டம்பர் 30-ந்தேதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்த நிலையில், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியின் கோரிக்கையை ஏற்று, கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

இதன்படி, அக்டோபர் 30-ந்தேதி வரை கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை பொதுமக்கள் தாக்கல் செய்யலாம். அவற்றை பரிசீலித்து விசாரணை நடத்தி முடிவு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 4-ந்தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA