Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 செப்டம்பர் (ஹி.ச.)
சமர்கண்டில் நடைபெற்ற 46-வது ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் இந்திய அணி கைப்பற்றியது.
மேலும், செஸ் ஒலிம்பியாட்டின் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஒருங்கிணைந்த சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் நாட்டிற்கு வழங்கப்படும் நோனா காப்ரிந்தாஷ்விலி கோப்பையையும் இந்தியா தக்கவைத்துக் கொண்டது.
சென்னையில் நடைபெற்ற 2022 ஒலிம்பியாட் மற்றும் புடாபெஸ்டில் நடைபெற்ற 2024 ஒலிம்பியாட் போட்டிகளில் ஓபன் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்றதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய செஸ் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
நமது செஸ் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் ஆர்வமும் உறுதியும் முன்மாதிரியானது. இந்த வெற்றிகள் மேலும் பல இளைஞர்களை செஸ் விளையாடவும், சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கட்டும்.
என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b