Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை அமர்வில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது நடந்தேறி வருகின்றன.
அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர்கள் முறையாக ஆஜராகாதது குறித்த வழக்கில், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மாநகராட்சி தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாதது குறித்து உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இது குறித்து விளக்கம் அளிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ககன்தீப்சிங் பேடி, வழக்கறிஞர்கள் ஆஜராகாததற்கான காரணங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், இனிவரும் காலங்களில் உயர் நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் முறையாகவும், தவறாமலும் பின்பற்றப்படும் என்றும், மாநகராட்சி தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞர்கள் தவறாமல் ஆஜராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b