துரோகம் பழகு திரைப்படத்தின் 3-வது பார்வை வெளியீடு- மாணவர்கள் உற்சாக வரவேற்பு!
சென்னை, 28 செப்டம்பர் (ஹி.ச.) மகிழ் ப்ரோடுக்சன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3வது லுக் போஸ்டர் கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. முன்னதாக படத்தின் ப்ர்ஸ
Movie


சென்னை, 28 செப்டம்பர் (ஹி.ச.)

மகிழ் ப்ரோடுக்சன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3வது லுக் போஸ்டர் கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

முன்னதாக படத்தின் ப்ர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர்களின் முன்னிலையில் படத்தின் 3வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் நடிகர் தக்க்ஷன் விஜய், வாழை ஜானகி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

தொடர்ந்து படத்தின் டீசர் திரையிடப்பட்ட நிலையில், அதற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

டீசரை மீண்டும் திரையிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, டீசர் மீண்டும் திரையிடப்பட்டது.

மாணவர்களின் இந்த உற்சாக வரவேற்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரோகம் பழகு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / Durai.J