தமிழகத்தில் நெல் உற்பத்திக்கு 79 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு
தமிழ்நாடு, 28 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் 2026–27-ம் ஆண்டில் மொத்த உணவு தானிய உற்பத்தியை 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேளாண்மைத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் நெல் உற்பத்திக்கு மட்டும் 79 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்
Nel


தமிழ்நாடு, 28 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் 2026–27-ம் ஆண்டில் மொத்த உணவு தானிய உற்பத்தியை 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேளாண்மைத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதில் நெல் உற்பத்திக்கு மட்டும் 79 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்து, ஹெக்டேருக்கு சராசரியாக 3,798 கிலோ மகசூல் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி சுமார் 121 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.

நெல் உற்பத்தியை அதிகரிக்க அதிக மகசூல் தரும் ரகங்கள், இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்பட உள்ளன.

மேலும், வறட்சி மற்றும் வெள்ளத்தைத் தாங்கும் ரகங்கள், ஊட்டச்சத்து நிறைந்த நெல் வகைகளின் பயன்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நெல் நுண்ணூட்டக் கலவை, திரவ உயிர் உரங்கள், பசுந்தாள் உர விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படுவதன் மூலம் 53,666 விவசாயிகள் பயன்பெற உள்ளனர். பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்திக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து, 79 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இலக்கை எட்ட வேளாண்மைத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Hindusthan Samachar / Durai.J