Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 29 செப்டம்பர் (ஹி.ச.)
புரட்சியாளர் தலைவர் ஷாஹீத்-ஏ-ஆசம் பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று லுதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற ‘ஜஷ்ன்-ஏ-இன்குலாப்’ நிகழ்ச்சியில் பஞ்சாப் அமைச்சர்கள் அமன் அரோரா, ஹர்பால் சிங் சீமா மற்றும் ஹர்பஜன் சிங் இடிஓ ஆகியோர் பங்கேற்றனர்.
பகத்சிங்கின் பாரம்பரியத்தை வலியுறுத்திய அமைச்சர்கள், அவரது கொள்கைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய அமன் அரோரா,
தேசத்தின் தலைசிறந்த மைந்தன் ஷாஹீத்-ஏ-ஆசம் சர்தார் பகத்சிங் அவர்களின் நினைவாக பஞ்சாப் அரசால் லுதியானாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு இது.
பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய ‘நஷா முக்த் அபியான்’ போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சாரம் வெறும் நாடகம். 2007 முதல் 2017 வரையிலான பாஜக ஆதரவு ஆட்சிக் காலத்தில்தான் பஞ்சாபில் ‘சிட்டா’ எனப்படும் செயற்கை போதைப்பொருள் என்ற சொல்லே முதன்முதலில் கேட்கப்பட்டது.
அப்போது அவர்களே இதற்கு உடந்தையாக இருந்தனர். இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த யாத்திரைகளால் எதுவும் நடக்கப்போவதில்லை. அவர்களைப் பற்றிய உண்மையை மக்கள் ஏற்கனவே உணர்ந்துவிட்டனர்.
“ஷாஹீத்-ஏ-ஆசம் சர்தார் பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜஷ்ன்-ஏ-இன்குலாப்’ நிகழ்ச்சியை பஞ்சாப் அரசும், சர்தார் பகவந்த் சிங் மான் தலைமையிலான நிர்வாகமும், ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வந்துள்ளனர்.
இங்கு கூடியுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
.இன்றைய நிகழ்ச்சி இளைய தலைமுறைக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்குகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஷாஹீத்-ஏ-ஆசம் சர்தார் பகத்சிங்கின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
போதைப்பொருட்களை கொண்டு வருபவர்களே பாஜகவினர் தான். அவர்கள் என்ன போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சாரம் நடத்துகிறார்கள்? இது வெறும் விளம்பரத்திற்கான பிரச்சாரம். பஞ்சாப் முழுவதும் அவர்களுக்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.
பாஜக நடத்தும் இந்த பிரச்சாரங்கள் வெறும் கண்துடைப்பு நாடகமே. பஞ்சாபில் இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b