Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 29 செப்டம்பர் (ஹி.ச.)
அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்தில், ஜிஹாதி நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாத கருத்தாக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது மொத்தம் 6 பேர் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பார்பேட்டா ரோடு மற்றும் ஹவ்லி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சர்போக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரே இடத்தில் 3 பேர் பிடிபட்டனர்.
பிடிபட்டவர்கள் சர்போக் பகுதியைச் சேர்ந்த பாகுரிகுரி பதார் கிராமத்தைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா, ஜாகிர் ஹுசைன் மற்றும் சந்த்பர் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பார்பேட்டா மாவட்டத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பிடித்து விசாரிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக பார்பேட்டா ரோடு பகுதியில் 2 பேரும், ஹவ்லி பகுதியில் ஒருவரும் பிடிபட்டிருந்தனர்.
அசாம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜிஹாதி தொடர்புகள் மற்றும் சந்தேகிக்கப்படும் தீவிரவாத கருத்தாக்க வலைப்பின்னல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒருங்கிணைந்த முறையில் விசாரணை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P