ஸ்ரீரங்கம் கோவில் நிலம் மோசடி வழக்கு – உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி
மதுரை, 29 செப்டம்பர் (ஹி.ச.) ஸ்ரீரங்கம் கோவில் நிலம் மோசடி வழக்கில், திருச்சி மாநகர் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க. செயலாளர் ராம்குமார் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிள
மதுரை மருத்துவமனை


மதுரை, 29 செப்டம்பர் (ஹி.ச.)

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் மோசடி வழக்கில், திருச்சி மாநகர் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க. செயலாளர் ராம்குமார் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் வழக்கை எவ்வாறு ரத்து செய்ய முடியும் என்றும் வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், உரிய ஆவணங்களுடன் முறைப்படி வாங்கிய நிலத்தை கோவில் நிலம் எனக் கூறி பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவை வாபஸ் பெற்றதன் அடிப்படையில் தள்ளுபடி செய்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam