Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 29 செப்டம்பர் (ஹி.ச.)
தஞ்சையில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 6 பேரின் வீடுகளில் எஸ்.ஐ.யூ. பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை, சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. சோதனையின்போது செல்போன்கள், பென்டிரைவ்கள், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உமர் முக்தார் அளித்த பேட்டியில், 6 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தியதாகவும், மதம் தொடர்பான சுமார் 30 புத்தகங்கள், செல்போன்கள் மற்றும் பென்டிரைவ்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், முஸ்லிம் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த சோதனை முஸ்லிம்கள் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் உமர் முக்தார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam