சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையாவை கண்டித்து அலங்காநல்லூரில் இன்று அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
மதுரை, 03 செப்டம்பர் (ஹி.ச.) சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா, ஜல்லிக்கட்டுப் போட்டிகளால் இளைஞர்களின் நல்வாழ்வும் எதிர்காலமும் சீரழிகிறது. அங்கு மைதானம் அமைப்பதற்குப் பதிலாக அலங்கா
சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையாவை கண்டித்து அலங்காநல்லூரில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்


மதுரை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா, ஜல்லிக்கட்டுப் போட்டிகளால் இளைஞர்களின் நல்வாழ்வும் எதிர்காலமும் சீரழிகிறது.

அங்கு மைதானம் அமைப்பதற்குப் பதிலாக அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு நிதி வழங்கியிருக்கலாம் எனப் பேசியிருந்தார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை இழிவாகப் பேசியதாகக் கூறி இவருக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பது போல கொச்சைப்படுத்தும் விதத்தில் அவர் பேசியதாக அதிமுக கடும் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ. ஒருவர் இழிவுபடுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அதிமுக தெரிவித்துள்ளது.

இது காளையை வளர்ப்போர், காளை பிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் மனதை புண்படுத்தும் செயல் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இதனைக் கண்டித்து இன்று காலை 10.30 மணிக்கு அலங்காநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காளை பிடி வீரர்கள், காளை வளர்ப்போர், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b