Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வி.எஸ்.பாபு பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு, கடந்த ஆகஸ்ட் 31 அன்று இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில்தான், இன்று காலை 10:30 மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு கொளத்தூர் தொகுதியின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமின்றி, தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / vidya.b