Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 30 செப்டம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இடைக்கோடு பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடிநீர் தொடர்ந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் இவ்வாறு வீணாகி வருகிறது.
இதனால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ஒருபுறம் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வரும் நிலையில், மறுபுறம் இவ்வாறு குடிநீர் வீணாவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, உடைந்த குடிநீர்க் குழாயை உடனடியாக சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, உடைந்த குழாயை விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b