புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ நேரு போராட்டம்
புதுச்சேரி, 30 செப்டம்பர் (ஹி.ச.) புதுச்சேரி தவெக கூட்டணியிலுள்ள நேயம் மக்கள் கழகத் தலைவரான உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு தனது ஆதரவாளர்களுடன் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு ம
MLA Nehru protests by laying siege to the Puducherry Legislative Assembly.


புதுச்சேரி, 30 செப்டம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி தவெக கூட்டணியிலுள்ள நேயம் மக்கள் கழகத் தலைவரான உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு தனது ஆதரவாளர்களுடன் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்த மின் கம்பம் சாய்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், 50 வயது தக்க பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் அவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் சட்டப்பேரவையில் கூடினர். மேலும், ஆதரவாளர்களுடன் சட்டப்பேரவை படிக்கட்டில் அமர்ந்து எம்எல்ஏ நேரு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து பேரவையின் வாயிற் கதவுகள் மூடப்பட்டன. இச்சூழலில் பேரவைத்தலைவர் அன்பழகன் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ நேருவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் சட்டப்பேரவை மாண்புகள் காக்கப்படுவதில்லை எனக்கூறி, அன்பழகன் அவரது அறைக்கு சென்றார்.

பின்னர் சட்டப்பேரவையிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே வந்து அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு தர்ணாவில் எம்எல்ஏ நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே போராட்டம் தொடர்பாக பேசிய எம்எல்ஏ நேரு கூறுகையில்,

அரசு இதுபோன்ற நிகழ்வுகளில் மெத்தனமாக செயல்படுகிறது.

உயிரிழந்த சிறுவனுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும். புதுச்சேரி நகரப் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டும்.

அதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறேன் என்றார்.

Hindusthan Samachar / vidya.b