தமிழகத்தின் எதிர்காலத்தை விஜய்யிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர் – அமைச்சர் செங்கோட்டையன்
திருப்பூர், 30 செப்டம்பர் (ஹி.ச.) தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள விஜய் இன்று தாராபுரம் வந்தார். மாருதி நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது
செங்கோட்டையன்


திருப்பூர், 30 செப்டம்பர் (ஹி.ச.)

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள விஜய் இன்று தாராபுரம் வந்தார்.

மாருதி நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வரலாற்றுச் சிறப்புமிக்க தாராபுரம் தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலத்தை மக்கள் விஜய்யிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார். தாராபுரம் இனிமேல் விசிலின் கோட்டை என்பதை வரும் 6-ம் தேதி நிரூபிக்கும் காலம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள் என தெரிவித்த செங்கோட்டையன், ரூ.147 கோடி செலவில் குடிநீர் திட்டத்திற்கான ஆணை வழங்கும் நாளாக இந்நாள் அமையும் என்றும் கூறினார்.

மேலும், இந்திய நாடே வியக்கும் வகையில் இரு தொகுதிகளின் தேர்தல் தீர்ப்பு அமையும் என்றும், இரு தொகுதிகளின் வெற்றியையும் விஜய்யிடம் ஒப்படைப்போம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam