Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர், 30 செப்டம்பர் (ஹி.ச.)
பள்ளி பாடப்புத்தகங்களில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி, ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக புவனேஸ்வரில் நப நிர்மான் கிருஷக் சங்கதன் மற்றும் நபநிர்மான் யுவ சத்ர சங்கதன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனேஸ்வரில் உள்ள பரமுண்டா பேருந்து நிலையத்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து டயர்களை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில்
2,000-க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பதாகவும், பாடப்புத்தகங்கள் தயாரிப்பில் 380 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்குப் பொறுப்பேற்று ஒடிசா பள்ளி மற்றும் வெகுஜனக் கல்வித் துறை அமைச்சர் நித்யானந்தா கோண்ட் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து நபநிர்மான் யுவ சத்ர சங்கதனின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.டி. மன்வர் அலி கூறுகையில்,
தற்போது புவனேஸ்வரில் பரமுண்டாவில் ஒடிசா பந்த் நடந்து வருகிறது.
ஒரு பக்கம் ஹன்ஸ்பால், மறுபக்கம் உத்தரா. அதேபோல் ஒடிசா முழுவதும் - மேற்கு ஒடிசா, கிழக்கு ஒடிசா, தெற்கு ஒடிசா என எல்லா இடங்களிலும் மறியல் தொடங்கிவிட்டது.
எனவே, ஒடிசா வெகுஜனக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதே இன்றைய எங்கள் கோரிக்கை. இன்றுடன் எங்கள் போராட்டம் 42 நாட்களை எட்டுகிறது.
தர்ணா போராட்ட மேடையில் நாங்கள் அமர்ந்திருந்தோம், ஆனால் அரசின் பிரதிநிதி யாரும் வந்து பேசவில்லை, அவரது ராஜினாமா குறித்தும் கேட்கவில்லை. அதனால்தான் ஒடிசா பந்த்துக்கு அழைப்பு விடுத்தோம்.
மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் பொதுமக்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தேர்வுகள் நெருங்கும் நிலையிலும் பல மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள தேசிய கீதத்திலேயே பிழைகள் உள்ளன.
என்று மன்வர் அலி தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் ராஜினாமா கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b