Enter your Email Address to subscribe to our newsletters

உஜ்ஜைன், 30 செப்டம்பர் (ஹி.ச.)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மசூதியின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய சாலை விரிவாக்கப் பணியின் போது கடந்த செப்டம்பர் 28 அன்று வன்முறை மோதல் ஏற்பட்டதை அடுத்து, உஜ்ஜைனில் உள்ள ஷாஹி மஸ்ஜித்தை சுற்றியுள்ள பாதுகாப்பு இன்று பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவல் துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி அப்பகுதியில் அமைதி நிலவியதாகவும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 28 அன்று இடிப்புப் பணிகளுக்கு மத்தியில் பெரும் கூட்டம் காவல்துறையினரை எதிர்கொண்டபோது மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்களை வீசியதை அடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்தனர்.
பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக விரைவு அதிரடிப் படையினரும் களத்தில் குவிக்கப்பட்டனர்.
உஜ்ஜைன் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளார். நகர் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மசூதியைச் சுற்றி இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அருகில் காவல்துறையினர் குதிரைப்படை அணிவகுப்பு நடத்தினர்.
மசூதியைச் சுற்றியிருந்த கடைகள் ஏற்கனவே காவல்துறை மேற்பார்வையில் அகற்றப்பட்டன.
வரவிருக்கும் சிம்மஸ்த கும்பமேளாவுக்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த சாலை விரிவாக்கத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b