சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணை தனது சொந்த காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார் - அமைச்சர் சம்பத்!
தாராபுரம் , 30 செப்டம்பர் (ஹி.ச.) தாராபுரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் இன்று கோவை நோக்கித் தனது காரில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார். அமைச்சரின் வாகனத் தொடர் தாராபுரம் - க
க


தாராபுரம் , 30 செப்டம்பர் (ஹி.ச.)

தாராபுரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் இன்று கோவை நோக்கித் தனது காரில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.

அமைச்சரின் வாகனத் தொடர் தாராபுரம் - கோவை சாலையில் உள்ள காளிபாளையம் பகுதியைக் கடந்து சென்ற போது, சாலையோரம் பெண் ஒருவர் சுயநினைவின்றித் திடீரென மயங்கி விழுந்து கிடப்பதைப் பார்த்து உள்ளார்.

தனது பயணத்தை உடனடியாக நிறுத்திய அமைச்சர், காரை விட்டு இறங்கிப் பாதையிலேயே சென்று அந்தப் பெண்ணின் நிலையை ஆய்வு செய்தார்.

உடனடியாகத் தாமதிக்காமல், தனது காரிலேயே அந்தப் பெண்ணைப் பத்திரமாக ஏற்றி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு சென்றார்.

தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அடைந்ததும், அங்கு இருந்த மருத்துவர்களிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்து, உடனடியாக அவசரச் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் இந்தச் சமயோஜிதமான மற்றும் விரைவான மனிதநேய நடவடிக்கையால் அந்தப் பெண்ணிற்குத் தகுந்த நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைத்து உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA