Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.)
வெள்ளையர் ஆதிக்கத்தை வீரத்துடன் எதிர்த்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை பெருமையுடன் போற்றுவோம் என்று தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
வெள்ளைப் பரங்கியை வீறுடன் எதிர்த்ததால்வள்ளலாய் வாழ்ந்தவர்வறியவனாய்ப் போனார்!
பாரதி வவேசுவாஞ்சி சிவாஎனும்விடுதலை வீரர்களுக்கிடயேவேங்கையாய் நின்றவர்
படித்த பட்டம் பாமரர்க்கு உதவிடஉழைக்கும் தொழிலாளர்களின்ஊதிய உயர்வுக்கு வழக்குகள் தொடுத்து வாதாடி வென்றுவளமான வாழ்க்கைக்கு வழிவகுத்தவர் வழக்கறிஞர் வ.உ. சிதம்பரம் பிள்ளை
அன்னிய ஆங்கிலேயன்ஆதிக்கம் செலுத்தியகடல் போக்குவரத்தில்சுதேசிக் கப்பலைசொந்தமாக செலுத்திடசொத்துக்கள் அனைத்தையும் விற்றார்ஒத்த கருத்துடையவரை ஒன்று சேர்த்து உதவிகள் பெற்றுபரங்கியருக்கு எதிராய் பாரினில் முதல்முறையாய்கப்பல் போக்குவரத்தைதூத்துக்குடியில் தொடங்கினார்.
எதிர்கொள்ள முடியாமல் எத்தர்படைசிதம்பரம் பிள்ளையைசிறையில் அடைத்துசவுக்கால் அடித்தும் செக்கிழுக்க வைத்தும்செய்த சித்திரவதைகளைஇறுமாப்புடன் எதிர்கொண்டார்
விடுதலையான பின்னர் வள்ளலாய் வாழ்ந்தவர்வறுமையில் வாடினார்
பாரதியின் பாடலைக் கேட்டவாறேமரணம் எய்தியமகத்தான மனிதர் சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளைபெருமையுடன் போற்றுவோம்!
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam