Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை டாஸ்மாக் ஊழியர்களிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 86 டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்,
ரூ.10 வாங்க மாட்டோம்,ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம் என முழக்கங்களை எழுப்பி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல் மற்றும் ரூ.10 வசூலிக்கும் பணியால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், பணம் வசூலிக்கும் போது பொதுமக்களுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
எனவே, இந்தப் பணியை டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து நீக்கி, அதற்கென தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam