ஆசிரியர் தினம் - ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாணவர்களின் வளமான எதிர்காலத்தி
விஜய்


தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலம் கருதாது பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மாணவர்களின் மனங்களில் அறிவொளியை ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைப்பதுடன், அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைத்துத் தரும் உன்னதப் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் வளர்ச்சியுடன் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்ற வேண்டும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் சிறந்த வழிகாட்டுதலும் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P