Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 05 செப்டம்பர் (ஹி.ச.)
வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கலில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால்தான் ராகுல் காந்திதான் பிரதமர் என அவர் வெளிப்படையாக கூற மறுக்கிறார்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்களை வைத்து விஜய்தான் அடுத்த பிரதமர் என பேச வைக்கிறார். இதை முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக மறுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு ஒரு வாக்குறுதியும், தேர்தலுக்குப் பிறகு வேறு வாக்குறுதியும் அளித்து இரட்டை வேடம் போடுகிறார்” என குற்றம்சாட்டினார்.
மேலும், கூட்டணிக் கட்சிகள் தொடர்பாக பேசிய அவர், “இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது தொழிலாளர் கொள்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆதரவு அளிப்போம்; இல்லையெனில் கூட்டணியில் இருக்க மாட்டோம் என தெளிவாக கூறியுள்ளன. காங்கிரஸும் பிரதமர் வேட்பாளர் குறித்து தெளிவு வேண்டும் என கூறியுள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தவே அமைச்சர்கள் அவர்களை சந்தித்து வருகின்றனர்” என்றார்.
சட்டப்பேரவை செயல்பாடுகளை விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன், “சட்டமன்றம் தற்போது வீர விளையாட்டு போல் நடக்கிறது; சட்டமன்றமாக தெரியவில்லை, விளையாட்டு மன்றமாக உள்ளது. பொறுப்பான முதலமைச்சராக இருந்தால் எதிர்க்கட்சிகள் கூறுவதை கேட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் என கூறுவதில் நியாயமும், மிரட்டும் நோக்கமும் இருப்பதாகத் தெரிகிறது” என்றார்.
ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் விமர்சித்தார்.
மேலும், இசக்கிமுத்து மீண்டும் எம்எல்ஏவாக தொடர்வது தொடர்பான விவகாரத்தில் இறுதி முடிவு நீதிமன்றத்துக்கே உரியது என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam