1908 திருநெல்வேலி எழுச்சி நினைவுச் சின்னத்தை நிறுவ வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்து, செந்நீர் சிந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் இயக
மு.க.ஸ்டாலின்


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்து, செந்நீர் சிந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் இயக்கியவர் மட்டுமல்ல வ.உ.சிதம்பரனார், திருக்குறளுக்கு உரை எழுதியவர், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்தவர், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தவர் என்றும், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய பன்முக ஆளுமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் அனைவரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், செக்கிழுத்த செம்மலுக்கு சிறப்பு சேர்க்கப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், 1908-ம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி எழுச்சியை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசும் அந்த அறிவிப்பைக் கைவிடாமல், அதனை நிறைவேற்ற வேண்டும் என வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P