பொட்டல்புதூரில் இளைஞர் தலை துண்டித்துக் கொலை - கனிமொழி எம்.பி. கண்டனம்
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புதூரில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்
Kanimozhi


Jj


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புதூரில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது,

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புதூரில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், நெல்லை–தென்காசி பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைகள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள கனிமொழி எம்.பி., தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ