Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கியுள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மீனாட்சி அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கி வரும் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு மேல் அம்மன் சன்னதி மற்றும் சித்தி விநாயகர் சன்னதி முன்பு விக்னேஸ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து பூஜைகளை நடத்த சுவாமியிடம் அனுமதி பெறுதல், கஜபூஜை, கோ பூஜை, தனபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.
மேலும், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளுக்காக 7 புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ