மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - வண்ணமயமாக ஜொலிக்கும் பிரம்மாண்ட கோபுரங்கள்
மதுரை, 06 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 17ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மீனாட்சி கோவில்


மதுரை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 17ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதையொட்டி கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கின.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கோவில் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து கோபுரங்களும் புதுப்பொலிவுடன் வண்ணமயமாக காட்சியளித்து வருகின்றன.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு கோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி உள்ளிட்ட கோவில் வளாகத்தில் உள்ள முக்கிய கோபுரங்கள் அனைத்தும் அழகுற வர்ணம் பூசப்பட்டு பிரம்மாண்ட தோற்றத்தில் உயர்ந்து நிற்கின்றன.

புதுப்பொலிவு பெற்ற கோபுரங்களை காண வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது.

வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam