சூறைக்காற்றுடன் கனமழை - ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்
தஞ்சாவூர், 07 செப்டம்பர் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வர
வாழை


தஞ்சாவூர், 07 செப்டம்பர் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று திருவையாறு அருகே உள்ள கருப்பூர் மற்றும் கோனேரிராஜபுரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது வீசிய பலத்த காற்றில், குலை தள்ளிய நிலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

வாழைத்தாருடன் மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து வாழை சாகுபடி செய்த நிலையில், தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, சேத மதிப்பீடு நடத்தி, விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam