மிசா கொடுமை குறித்து பேச சட்டத்துறை அமைச்சருக்கு தகுதி இல்லை - அன்பில் மகேஷ்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள சட்டத்துறை அமைச்சராக காக்கி டவுசர் போட்ட ஒருவர் இருப்பதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்ப
Anbil


J


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள சட்டத்துறை அமைச்சராக காக்கி டவுசர் போட்ட ஒருவர் இருப்பதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அண்ணல் அம்பேத்கர் அளித்த சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய துறை அமைச்சராக காக்கி டவுசர் போட்டவர் இருக்கிறார். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே உண்மைக்கு மாறான பொய்களை மட்டுமே நார்சிஸ்ட் மனநிலையில் பேசி வருகிறார்.

குரூர மனம் கொண்டவர்கள் மிசா கொடுமைகள் குறித்து பேசுவதற்குச் சிறிதும் தகுதி இல்லாதவர்கள். மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்தவர்களைத் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்தான் இன்றைய சட்டத்துறை அமைச்சர்.

அவருக்கு தலைவர் என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது என அன்பில் மகேஷ் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ