Enter your Email Address to subscribe to our newsletters
இந்தியா, 18 டிசம்பர் (H.S.)
சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை நவம்பர் மாதத்தில் சுமார் ரூ.3.18 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய உச்சம் எட்டியுள்ளது.
கடந்த அக்டோபரில் ரூ.2.28 லட்சம் கோடியாக இருந்த சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை, நவம்பர் மாதத்தில் இத்தகைய புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாட்டின் இறக்குமதி நவம்பரில் 27% வரை உயர்ந்து சுமார் 5.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
குறிப்பாக, அக்டோபரில் ரூ.60,000 கோடியாக இருந்த தங்கம் இறக்குமதி நவம்பரில் இரு மடங்காக உயர்ந்து ரூ.1.2 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து, ரூ.2.70 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து விரிவடைந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையால் ரூபாயின் மதிப்பில் எதிர்மறை தாக்கம் ஏற்படும் கவலைகளை எழுப்பியுள்ளது
Hindusthan Samachar / vidya.b