Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 17 டிசம்பர் (H.S.)
---------------
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ.காலனி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் துரையரசன். இவர் நேற்று காலை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று முன்னாள் சென்ற டெம்போ ட்ராவலர் வேனை முந்தி மதுரை தேனி செல்லும் தேசியநெடுச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அதிவேகமாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த துரையரசன் இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த துரையரசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த திரையரசன் இன்று காலை 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Hindusthan Samachar / RAJ .T