ஸ்ரீபெரும்புதூர் அருகே முன்னால் காதலியை சந்தித்த காதலன் தற்கொலை 
ஸ்ரீபெரும்புதூர் 18 டிசம்பர் (H.S.) திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருடைய மகன் மாரியப்பன்(23). இவர் கடந்த ஒரு வருடமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விவேகானந்தர் நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ம
Boyfriend commits suicide after meeting married girlfriend near Sriperumbudur 


ஸ்ரீபெரும்புதூர் 18 டிசம்பர் (H.S.)

திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருடைய மகன் மாரியப்பன்(23). இவர் கடந்த ஒரு வருடமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விவேகானந்தர் நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் மாரியப்பன் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தனது சொந்த ஊரில் உள்ள உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 1 வருடத்திற்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஏற்கனவே மாரியப்பன் காதலித்து வந்த பெண் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கேள்விப்பட்டு அந்த பெண்ணை மாரியப்பன் நேற்று சந்தித்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்பு வீட்டுக்கு வந்த மாரியப்பன் தனது அம்மாவுக்கு போன் செய்து நான் காதலித்து வந்த பெண்ணை பார்த்தேன் அவள் என்னை கேவலமாக பேசிவிட்டாள் ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறிவிட்டு மாரியப்பன் குடியிருக்கும் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / RAJ .T