Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 டிசம்பர் (H.S.)
உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ 5 கோடி பரிசு தொகைக்கான காசோலையை வழங்கினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற எப் ஐ டி இ உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக தமிழக செஸ் வீரர் குகேஷிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தனக்கு வழங்கப்பட்ட கோப்பையை குகேஷ் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் அவர்களின் பெற்றோர் மற்றும் அரசு அலுவலர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்
Hindusthan Samachar / vidya.b