சிவகார்த்திகேயனின் தாடிக்கு நோ சொன்ன பெண் இயக்குனர் 
சென்னை, 18 டிசம்பர் (H.S.) டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை பிரபல பெண் இயக்குநர் சுதா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 24 வது படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இப்டத்தின் படப்ப
சிவகார்த்திகேயனின் தாடிக்கு நோ சொன்ன இயக்குனர் சுதா


சென்னை, 18 டிசம்பர் (H.S.)

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை பிரபல பெண் இயக்குநர் சுதா இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் 24 வது படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.

இப்டத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கும் சிக்கந்தர் படத்தை முடிவிட்டு, பிறகு சிவகார்த்திகேயனின் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். இதனால், சிவகார்த்திகேயனின் 23 வது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க சுமார் 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்குரா தனது படத்திற்காக சிவகார்த்திகேயனை தாடியை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸுக்காக வளர்த்த தாடி என்பதால் சிவகார்த்திகேயன் எடுக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனால், இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதாகவும் அதே சமயம், இந்த பிரச்சனையை தயாரிப்பு தரப்பு பேசி முடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்படி, தற்போது தாடியை எடுத்துவிடு சம்மதம் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி படத்தை முடித்துவிட்டு வரும் போது அதற்குள் மீண்டும் அதே அளவு தாடி வளர்த்துக்கொள்வதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கூறி, அவரிடம் சம்மதமும் பெற்று விட்டாராம்.

Hindusthan Samachar / vidya.b