ஆஸ்திரேலிய தீவு நாட்டில் நிலநடுக்கம் :14 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியா, 18 டிசம்பர் (H.S.) ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடனான வானுவாடுவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். வானாட்டு தீவு தலைநகர் போர்ட்
ஆஸ்திரேலிய தீவு நாட்டில் நிலநடுக்கம் :14 பேர்  உயிரிழப்பு


ஆஸ்திரேலியா, 18 டிசம்பர் (H.S.)

ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடனான வானுவாடுவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

வானாட்டு தீவு தலைநகர் போர்ட் விலாவை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது அது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியது. மதியம் 1 மணிக்கு முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டது, அதைத் தொடர்ந்து பெரிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இத்தகைய நில அதிர்வால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல கட்டிடங்ள் தரைமட்டமானது.

இந்த நிலையில் இன்றைய தினம் இறப்பு குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பை பசிபிக் பிராந்தியத்தின் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டது அதில், 14 பேர் உயிரிழந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன.

Hindusthan Samachar / vidya.b