டெல்லி சட்டப் பேரவை தேர்தல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை.
டெல்லி, 18 டிசம்பர் (H.S.) டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாகி வரும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அரசியல் கட்சிகளின் கருத்துகள் ஆகியவை தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள அங்கீகரிக்க
Election Commission consults with representatives of recognized political parties for Delhi Legislative Assembly elections.


டெல்லி, 18 டிசம்பர் (H.S.)

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாகி வரும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அரசியல் கட்சிகளின் கருத்துகள் ஆகியவை தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை நடத்தியது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

பாஜகவின் சார்பில் பாஜக எம்பி பன்சூரீ சுவராஜ் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம் பி ராகவ் சதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / RAJ .T