Enter your Email Address to subscribe to our newsletters
மும்பை, 18 டிசம்பர் (H.S.)
ஆஸ்கர் 2025-க்கு தகுதியான படங்களின் பெயர்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் இடம்பெறவில்லை.
நடிகர் அமீர்கான், ஜோதி தேஷ்பாண்டே, இயக்குநர் கிரண் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படத்தை இயக்குனர் கிரண் ராவ் இயக்கியிருந்தார்.
இப்படத்தை 2025 ஆம் ஆண்டுகான ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 29 திரைப்படங்களில் இருந்து இந்தியா சார்பில், ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஆஸ்கார் விருதுக்கு அனுப்பியது. ஆனால் இப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவில்லை. எனினும், சர்வதேச இணை தயாரிப்பில் வெளியான ‘சந்தோஷ்’ என்ற இந்தி திரைப்படம் தேர்வு பட்டியலில் இடம்பெறுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b