குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா தியாகியா -மஹாராஷ்டிரா ஆளுநர்  கேள்வி?
கோவை, 18 டிசம்பர் (H.S.) மஹாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன், குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் தமிழக அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டதால், அவன் குற்றவாளி அல்லது தியாகியா என கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந
குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா தியாகியா?


கோவை, 18 டிசம்பர் (H.S.)

மஹாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன், குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் தமிழக அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டதால், அவன் குற்றவாளி அல்லது தியாகியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மஹாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன்:

இன்றைக்கு அது போன்ற ஒரு ஈன சக்தி மீண்டும் ஒரு தியாகி ஊர்வலமாக செல்வதற்கு மாநில அரசு அனுமதிக்கிறது என்று சொன்னால் சாதாரண மக்கள் கொன்று குவிக்கப்படுவதை தமிழக அரசு போற்றுகிறதா பாராட்டுகிறதா என்ற கேள்வி தான் முன் நிற்கிறது. இரண்டு அரசியல் தலைவர்கள் கூட தியாகிக்கு மரியாதை தருவது போல் குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள் அந்த இரண்டு தலைவர்களையும் நம்முடைய தமிழ் மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் இது அரசியல் தலைமைக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் வெடிகுண்டுகளால் சாதாரண குழந்தைகளை கூட கொன்று குவித்த ஒருவன் தியாகியா அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அவனை போற்ற முடியுமா அவனுடைய இறப்பை கொண்டாட முடியுமா இது மாபெரும் தவறு அதற்கு கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு கருப்பு தின பேரணி நடத்தப்படும் என்று கூறியதை வரவேற்கிறேன் என்று கூறினார்.

மேலும் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன், சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு பிறகு மிகப்பெரியதாக போற்றக்கூடிய ஒரு தலைவராக திகழ்ந்தவர் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும் அவரது புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ஒவ்வொருவரது கடமை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தந்தவர் அதனால் தான் இன்றைக்கும் நம் நாட்டில் இந்திரா காந்தி அவர்களால் கூட இந்த ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்க இயலவில்லை என்று கூறிய ஆளுநர் அத்தகைய மகத்தான மனிதனின் புகழுக்கு நாம் ஒருபோதும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகிறது என்றால் 1971ல் கலைஞர் எதற்காக பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தினார் என்று கேள்வி எழுப்பிய ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன்

மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Hindusthan Samachar / vidya.b