Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 டிசம்பர் (H.S.)
சென்னை புழல் மகளிர் சிறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த Nkekakonamu Precious (24) என்ற பெண் சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரால் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் புழல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் அனைத்து கைதிகள் தங்கி இருக்கும் அறைகளை பெண் சிறை காவலர்கள் சோதனை செய்தனர். நைஜீரிய பெண் கைதி தங்கி இருக்கும் அறையில் போலீசார் சோதனை செய்ய சென்றபோது ஏன் இங்கு வருகிறீர்கள் உள்ளே வந்தால் கொலை செய்து விடுவேன் எனவும், சோப்பு கட்டியை கொண்டு துணியில் சுற்றி அடித்து விடுவதாகம், சிறுநீரை டப்பாவில் பிடித்து மேலே ஊற்றி விடுவேன் எனவும், ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் நின்று அட்டூழியம் செய்துள்ளார்.
அப்போது அவரை தடுக்க முயன்ற பெண் சிறை காவலர் லத்திகா பீவி என்பவருக்கு நகக்கீறலால் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மகளிர் சிறையின் துணை சிறை அலுவலர் அனுராதா அளித்த புகாரின் பேரில் நைஜீரிய பெண் கைதி மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டல் உட்பட 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் மகளிர் சிறையில் நைஜீரிய பெண் கைதி ரகளை ஈடுபட்ட சம்பவத்தால் சிறைக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / RAJ .T