படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸ் காயம்
ஹைதராபாத், 18 டிசம்பர் (H.S.) இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமான பிரபாஸ் நடிப்பில் வரவிருக்கும் , தி ராஜா சாப், திரைப்படம் திகில்-காமெடியாக உருவாக்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் தேதியை படக்குழு நீண்ட நாட்களுக்கு முன
படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸ் காயம்


ஹைதராபாத், 18 டிசம்பர் (H.S.)

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமான பிரபாஸ் நடிப்பில் வரவிருக்கும் , தி ராஜா சாப், திரைப்படம் திகில்-காமெடியாக உருவாக்கி வருகிறது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் தேதியை படக்குழு நீண்ட நாட்களுக்கு முன்பே அறிவித்தது. பிரபாஸின் வேடிக்கையான காட்சியையும் அவரது வயதான தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏப்ரல் 10 தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது இப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் எனவும் படப்பிடிப்பு தளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

சிகிச்சைக்காக பிரபாஸ் ஜெர்மனி செல்லவுள்ளதாக தெரிவித்துள்ள படக்குழுவினர் அவர் சிகிச்சை முடிந்து திரும்பிய பின்னரே படத்தின் இறுதி கட்ட பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b