சிவகார்த்திகேயனின் பொங்கல் விருந்து
சென்னை, 18 டிசம்பர் (H.S.) வெற்றிப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தனது 23 வது பட வேலைகளை நடிகர் சிவகார்த்திகேயன் கவனித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எஸ் கே 23 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் வேலைகள் தற்போது முடுக்கி விடப்
சிவகார்த்திகேயனின் பொங்கல் விருந்து


சென்னை, 18 டிசம்பர் (H.S.)

வெற்றிப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தனது 23 வது பட வேலைகளை நடிகர் சிவகார்த்திகேயன் கவனித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எஸ் கே 23 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதன்படி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே 23’ படத்தின் அப்டேட்டை பொங்கல் பண்டிகையில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தளிக்க முடிவு செய்திருக்கும் ‘எஸ்.கே 23’ படக்குழு படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ ஒன்றை அன்றைய தினம் வெளியிட உள்ளது.

ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வித்யூ ஜமால் விக்ராந்த் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இப்படத்துக்கு அனிருத் திசை அமைக்கிறார் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது

Hindusthan Samachar / vidya.b