Enter your Email Address to subscribe to our newsletters
இந்தியா, 18 டிசம்பர் (H.S.)
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரிடம் கச்சத்தீவை மீட்பது குறித்து இந்திய அரசு பேசாமல் போனதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், இலங்கை ராணுவத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும், என்று பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி உள்ள நிலையில், அவர்களில் யாருமே தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்பது குறித்து வாய் திறவாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கச்சத்தீவை மீட்காமல் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், என்ன தீர்வை எட்டினாலும் , அவை ஒரு போதும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிலைத்த பயனோ அல்லது பாதுகாப்போ தரபோவதில்லை, என்று தெரிவித்திருக்கும் சீமான், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகார மற்றம் எத்தனை முறை நிகழ்ந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் மட்டும் தொடர் கதையாகவே உள்ளது. அதற்உ எவ்வித எதிர்வினையுமாற்றாது ஒப்புக்கு கடிதம் எழுதிவிட்டு, கடமை முடிந்ததாய் ஆட்சியாளர்கள், கடந்து போவதுதான் இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்கள் கண்ணீர் கடலில் தத்தளிக்கும் கொடுந்துயர்மிகு வரலாறாகும், என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / Durai.J